search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி
    X

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார் விராட் கோலி

    பாகிஸ்தானுக்கு எதிராக 57 ரன்கள் எடுத்திருக்கும்போது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார் விராட் கோலி.
    இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 57 ரன்களை எடுத்தபோது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது 11 ஆயிரம் ரன்களை பதிவு செய்தார். அவர் 222 இன்னிங்சில் இந்த ரன்னைக் கடந்தார்.

    இதன்மூலம் 11 ஆயிரம் ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 276 இன்னிங்சில் 11 ஆயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது. விராட் கோலி தற்போது அதை முறியடித்துள்ளார். ரிக்கி பாண்டிங் 286 இன்னிங்ஸ் உடன் 3-வது இடத்திலும், கங்குலி 288 இன்னிங்ஸ் உடன் 4-வது இடத்திலும், கல்லீஸ் 293 இன்னிங்ஸ் உடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

    சச்சின் தெண்டுல்கர் 10 ஆயிரம் ரன்னில் இருந்து 11 ஆயிரம் ரன்களை கடக்க 17 இன்னிங்ஸ் மட்டுமே எடுத்துக் கொண்டார். அதேபோல்தான் விராட் கோலியும் 17 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்னில் இருந்து 11 ஆயிரம் ரன்களை கடக்க எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×