search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘போர் அல்ல, பொறுமையாக பாருங்கள்’ - ரசிகர்களுக்கு வாசிம் அக்ரம் வேண்டுகோள்
    X

    ‘போர் அல்ல, பொறுமையாக பாருங்கள்’ - ரசிகர்களுக்கு வாசிம் அக்ரம் வேண்டுகோள்

    இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்த்து இரு நாட்டு ரசிகர்களும் சந்தோ‌‌ஷப்பட வேண்டுமே தவிர இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் சூழலை மோசமாக்கக்கூடாது என ரசிகர்களுக்கு வாசிம் அக்ரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    லாகூர்:

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான இன்றைய மோதல் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தை சுமார் 100 கோடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இது தான் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிறைந்த போட்டியாகும். இந்த ஆட்டத்தை இரண்டு நாட்டு ரசிகர்களும் பொறுமையாக பார்த்து ரசியுங்கள் என்பது தான் என்னுடைய செய்தியாகும்.



    இந்த போட்டியை பார்த்து இரு நாட்டு ரசிகர்களும் சந்தோ‌‌ஷப்பட வேண்டுமே தவிர இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் சூழலை மோசமாக்கக்கூடாது. போட்டி என்று வந்து விட்டால் ஒரு அணி வெற்றி பெறும். ஒரு அணி தோல்வி காணும். எனவே ஆட்டத்தை பொறுமையாக பார்த்து ரசிக்க வேண்டும். இதனை போர் என்று கருதக்கூடாது. இந்த போட்டியை போர் என்று நினைப்பவர்கள் உண்மையான கிரிக்கெட் ரசிகராக இருக்க முடியாது. உலக கோப்பை போட்டியில் ஆக்ரோ‌‌ஷத்தை கட்டுப்படுத்தினால் பாகிஸ்தான் அணியால் இந்தியாவை வெல்ல முடியும்.

    உலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் ஆடிய ஆட்டங்கள் அனைத்தும் எனது நினைவில் இல்லை. ஆனால் எல்லா ஆட்டங்களையும் நான் ஒரு ரசிகனாக டெலிவி‌‌ஷனில் ரசித்து பார்த்து இருக்கிறேன். இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் வலுவாக உள்ளது. ஆனால் பாகிஸ்தானும் எல்லா வகையிலும் அதற்கு நிகரானது தான். இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பொறுத்தமட்டில் எந்த அணி நெருக்கடியை சிறப்பாக கையாள்கிறதோ? அந்த அணி வெற்றி பெறும். முழு போட்டியையும் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். மழையால் இந்த போட்டி பாதிக்கப்படாது என்று நம்புகிறேன்.

    இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.
    Next Story
    ×