என் மலர்

  செய்திகள்

  உலகக்கோப்பைக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது இந்திய அணி- அட்டவணை வெளியீடு
  X

  உலகக்கோப்பைக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது இந்திய அணி- அட்டவணை வெளியீடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
  ஆண்டிகுவா:

  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடர் ஜூலை 14-ந் தேதி நிறைவு பெறுகிறது. இதனையடுத்து இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இத்தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் மூன்று டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இத்தொடர் ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதிவரை நடைபெற உள்ளது.

  இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முதலில் நடைபெற உள்ளது. அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இறுதியாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்காக, இந்திய அணி பங்கேற்கும் முதல் தொடர் இதுவாகும். ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.  தரவரிசையில் முதல் 9 இடங்களில் உள்ள அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும். இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியாக இந்த அணிகள் 6 தொடர்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் விளையாடும். 3 ஆண்டுகளாக நடத்தப்படும் டெஸ்ட் தொடரில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும். இறுதிப்போட்டியில் வெல்லும் அணி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை தட்டிச்செல்லும்.
  Next Story
  ×