search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய ரசிகர்கள் ஸ்மித்தை கேலி செய்தது போன்று எங்கள் நாட்டு ரசிகர்கள் செய்யமாட்டார்கள் - பாக். கேப்டன்
    X

    இந்திய ரசிகர்கள் ஸ்மித்தை கேலி செய்தது போன்று எங்கள் நாட்டு ரசிகர்கள் செய்யமாட்டார்கள் - பாக். கேப்டன்

    இந்திய ரசிகர்கள் ஸ்மித்தை கேலி செய்தது போன்று பாகிஸ்தான் ரசிகர்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கருத்து தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான போட்டி கடந்த ஞாயிற்றுகிழமை (ஜூன் 9) லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்தபோது, ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் பவுண்டரி எல்லைக்கு அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது போட்டியை காண வந்த இந்திய ரசிகர்கள் சிலர் ஸ்மித்தின் மனதை புண்படுத்தும் விதமாக கோஷமிட்டனர்.



    இதனை கவனித்த இந்திய கேப்டன் கோலி, ரசிகர்களை நோக்கி ஸ்மித்தை கைதட்டி உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து ரசிகர்கள் அவ்வாறு கூச்சலிடுவதை நிறுத்தினர். போட்டி முடிந்த பின்னர் இதுகுறித்து பேசிய கோலி, ரசிகர்களின் இத்தகைய செயலுக்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் இன்று (ஜூன் 12) நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியினை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது:-

    ஆஸ்திரேலியா அணியுடனான ஆட்டம் மிகவும் கடுமையானதாக இருக்கும். ஆனால் எங்கள் அணி முழு திறனையும் வெளிப்படுத்தி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 14-வது லீக் ஆட்டத்தில் (ஜூன் 9) ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித்தை இந்திய ரசிகர்கள் கேலி செய்தது போன்று இன்றைய ஆட்டம் மட்டுமல்லாமல் என்றுமே பாகிஸ்தான் ரசிகர்கள் செய்யமாட்டார்கள். பாகிஸ்தானியர்கள் கிரிக்கெட்டினையும் கிரிக்கெட் வீரர்களையிம் மிகவும் விரும்புபவர்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் இந்திய ரசிகர்கள் குறித்து சர்ச்சைக்குறிய கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமதுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஞாயிற்றுகிழமை (ஜூன் 16) நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×