என் மலர்

  செய்திகள்

  ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீளுமா? - பாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை
  X

  ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீளுமா? - பாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
  டவுன்டான்:

  உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 14-வது நாளான இன்று (புதன்கிழமை) டவுன்டானில் நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

  ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசையும் தோற்கடித்தது. 3-வது லீக் ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது.  இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் சற்று தடுமாற்றத்தை சந்தித்தனர். வழக்கமான அந்த அணியின் அதிரடி ஆட்டத்தை காண முடியவில்லை. உலக கோப்பை போட்டியில் 1999-ம் ஆண்டுக்கு பிறகு சேசிங் செய்கையில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்தது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சும் மெச்சும் படியாக அமையவில்லை. முந்தைய ஆட்டத்தில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டு வர 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும்.

  பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசிடம் மோச மான தோல்வியை சந்தித்தது. அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு 14 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. இலங்கைக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

  இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர நேர்த்தியாக செயல்பட்டது. அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் ஆக்ரோஷமாக விளையாடுவோம் என்று பாகிஸ்தான் அணி சூளுரைத்துள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 15 ஒரு நாள் போட்டியில் 14-ல் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே அந்த நம்பிக்கையுடன் ஆஸ்திரேலிய அணி களம் காணும்.

  டவுன்டானில் இன்று வானம் மேகமூட்டமாக இருக்கும் என்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர் ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

  போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

  ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஸ்டீவன் சுமித், உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, நாதன் கவுல்டர் நிலே, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன் அல்லது ஜாசன் பெரேன்டோர்ப்.

  பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), ஆசிப் அலி, சோயிப் மாலிக், வஹாப் ரியாஸ், ஹசன் அலி, ஷதப் கான், முகமது அமிர். 
  Next Story
  ×