என் மலர்

  செய்திகள்

  புண்படுத்த வேண்டாம்... உற்சாகப்படுத்துங்கள்- ஸ்மித்திற்கு தோள்கொடுத்த கோலி
  X

  புண்படுத்த வேண்டாம்... உற்சாகப்படுத்துங்கள்- ஸ்மித்திற்கு தோள்கொடுத்த கோலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் மனதை புண்படுத்தும் விதமாக கோஷமிட்ட ரசிகர்களிடம், அவரை உற்சாகப்படுத்துமாறு கோலி கேட்டுக்கொண்டது காண்போரை நெகிழவைத்தது.
  லண்டன்:

  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

  இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்த போது, ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் பவுண்டரி எல்லைக்கு அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது போட்டியை காண வந்த இந்திய ரசிகர்கள் சிலர் ஸ்மித்தின் மனதை புண்படுத்தும் விதமாக கோஷமிட்டனர். இதை பொருட்படுத்தாத ஸ்மித் ஆட்டத்தில் கவனம் செலுத்தினார்.  இதனை கவனித்த இந்திய கேப்டன் கோலி, ரசிகர்களை நோக்கி ஸ்மித்தை கைதட்டி உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து ரசிகர்கள் அவ்வாறு கூச்சலிடுவதை நிறுத்தினர். கோலியின் மனிதநேயமிக்க இச்செயலை கண்ட ஸ்மித், அவரை தட்டிக்கொடுத்து நன்றி தெரிவித்தார்.

  போட்டி முடிந்த பின்னர் இதுகுறித்து கோலி பேசுகையில், "ரசிகர்களின் இத்தகைய செயலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்திய ரசிகர்கள் மோசமான முன்னுதாரணமாக இருந்துவிடக்கூடாது என்ற நோக்கில் அவர்களிடம் ஸ்மித்தை கைதட்டி உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன். ஆஸ்திரேலியா விளையாடிய முந்தைய போட்டியிலும் இவ்வாறு நடந்ததாக கேள்விப்பட்டேன். என்னுடைய பார்வையில் இது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

  ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கினர். இதனையடுத்து அவர்களுக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிந்து அணிக்கு திரும்பியுள்ள நிலையிலும், அவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 
  Next Story
  ×