என் மலர்
செய்திகள்

ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போர்ச்சுக்கல் அணி
போர்டோ நகரில் நடைபெற்ற தேசிய லீக் கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
போர்ச்சுக்கல்:
போர்ச்சுக்கலில் உள்ள போர்டோ நகரில் தேசிய லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.
இப்போட்டியில் போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோ 3 கோல்களை அடுத்தடுத்து அடித்து அசத்தினார். முடிவில் 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போர்ச்சுக்கல் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

வருகின்ற 10ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை போர்ச்சுக்கல் அணி எதிர் கொள்கிறது
Next Story