என் மலர்
செய்திகள்

உலக கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக இன்ஃபண்டினோ மீண்டும் தேர்வு
உலக கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக இன்ஃபண்டினோ இரண்டாவது முறையை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாரிஸ்:
உலகின் அதிக மக்களால் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டுகளில் முதன்மையானது கால்பந்தாட்டம். அதனை ஃபிஃபா எனப்படும் உலக கால்பந்து சம்மேளன அமைப்பு நிர்வகித்து வருகிறது.
இந்த அமைப்பிற்கான தலைவர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 2019-2023-ம் ஆண்டுக்கான உலக கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் இம்மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் 49 வயது நிரம்பிய தற்போதைய தலைவர் இன்ஃபண்டினோ மீண்டும் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து போட்டியிட யாரும் விருப்பம் தெரிவிக்காததால் அவர் தனி பெரும்பான்மை வாக்குகளுடன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று உலக கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2018-ல் ரஷியாவில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடுவர் கொடுக்கும் முடிவை மறு ஆய்வு செய்யும் `வர்’ (VAR) எனப்படும் வீடியோ உதவி நடுவர் முறையை இன்ஃபண்டினோ அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story