என் மலர்

  செய்திகள்

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்து அசத்திய ரோகித் சர்மா
  X

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்து அசத்திய ரோகித் சர்மா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
  லண்டன்

  இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 7-வது நாளான இன்று சவுத்தாம்டனில் நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து  இந்திய அணி முதலில் பந்து வீசியது.

  50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 228 என் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

  இதை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரோகித் சர்மா சிறப்பாக ஆடி சதம் அடித்தார்.

  இவர் 128 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 2019 உலகக்கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

  இது சர்வேதச ஒரு நாள் போட்டிகளில் இவருக்கு 23 வது சதம் ஆகும். மேலும் உலக கோப்பை தொடர்களில் இவருக்கு 2வது சதம் ஆகும்.
  Next Story
  ×