search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்சிபி, ராஜஸ்தானுக்கு எமனாக அமைந்த டெல்லி: பிளே-ஆப்ஸ் சுற்று வாய்ப்பை பறித்து கடைசி இடத்திற்கு தள்ளியது
    X

    ஆர்சிபி, ராஜஸ்தானுக்கு எமனாக அமைந்த டெல்லி: பிளே-ஆப்ஸ் சுற்று வாய்ப்பை பறித்து கடைசி இடத்திற்கு தள்ளியது

    ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்று, பிளே-ஆப்ஸ் சுற்று வாய்ப்பை பறித்து வெளியேற்றியுள்ளது. #IPL2019
    ஐபில் தொடரில் நேற்றோடு லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. இதுவரை 11 சீசனில் இப்படி ஒரு பரபரப்பு இருந்தது கிடையாது. இந்த சீசனில் நேற்று கடைசியாக நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி முடியும் வரை யார் முதல் இடம், பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை என்பது புதிராகவே இருந்தது.

    மேலும், முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகள் தலா 9 வெற்றிகள் பெற்று 18 புள்ளிகள் பெற்றன. ரன்ரேட் அடிப்படையிலேயே மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.



    மேலும், வெற்றிகளுடன் 12 புள்ளிகளே பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஐபிஎல் வரலாற்றில் 6 வெற்றிகளுடன் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. அதேவேளையில் கேகேஅர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் 6 வெற்றிகளுடன் ஏமாந்து 5-வது மற்றும் 6-வது இடத்தை பிடித்தன.

    முதலில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று அதன்பின் சிறப்பாக விளையாடி ஐந்தில் வெற்றி, ஒரு போட்டி முடிவில்லை ஆகியவற்றுடன் 11 புள்ளிகள் பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் 7-வது இடத்தையும், முதல் 6 போட்டியில் தோல்வியை சந்தித்த ஆர்சிபி அதன்பின் ஐந்து வெற்றி, ஒரு போட்டி முடிவில்லை ஆகியவற்றுடன் 11 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    ஆர்சிபி கடைசி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் 12-வது லீக்கில் டெல்லியை சந்தித்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 187 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய ஆர்சிபி 171 ரன்கள் எடுத்து 16 ரன்னில் தோல்வியைத் தழுவியது. இதனால் ஆர்சிபி-யின் பிளே-ஆப் சுற்றுக்கு செக் வைத்தது. டெல்லியை வீழ்த்தியிருந்தால் அதன்பின் இரண்டு ஆட்டங்களும் சொந்த மைதானத்தில் நடந்ததால் ஆதிக்கம் செலுத்தியிருக்கும்.

    அதன்பின் ராயல் சேலஞ்சர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையினால் தடைபட்டது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது ஆர்சிபி. டெல்லிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தால் 13 புள்ளிகளுடன் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியிருக்கும்.

    அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் 12-வது ஆட்டத்தில் வெற்றி பெற்று ஐந்து வெற்றி பெற்றிருந்தது. ஆர்சிபி-க்கு எதிரான ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளி பெற்று 11 புள்ளிகள் பெற்றிருந்தது.



    டெல்லிக்கு எதிராக கடைசி லீக்கில் களம் இறங்கியது. இதில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் 115 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய டெல்லி ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் அடிக்க 16.1 ஓவரில் வெற்றி பெற்றது

    இந்த போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் 13 புள்ளிகளுடன் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியிருக்கலாம். இதனால் டெல்லி கேப்பிட்டல் இரண்டு அணிகளின் பிளே-ஆப்ஸ் சுற்று வாய்ப்பை பறித்ததுடன், கடைசி இடத்திற்கும் தள்ளிவிட்டது.
    Next Story
    ×