என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
5வது வெற்றி பெறும் ஆர்வத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- பெங்களூர் அணியுடன் இன்று மோதல்
Byமாலை மலர்19 April 2019 3:47 PM IST (Updated: 19 April 2019 3:49 PM IST)
ஐ.பி.எல். போட்டியின் 35-வது லீக் ஆட்டத்தில் இன்று தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. #IPL2019 #KKRvRCB
கொல்கத்தா:
ஐ.பி.எல். போட்டியின் 35-வது ‘லீக்’ ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
இதில் தினேஷ்கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
கொல்கத்தா அணி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி ஐதராபாத் (6 விக்கெட்), பஞ்சாப் (28 ரன்), பெங்களூர் (5 விக்கெட்), ராஜஸ்தான் (8 விக்கெட்) ஆகிய அணிகளை வென்று இருந்தது. டெல்லி (சூப்பர் ஓவர், 7 விக்கெட்), சென்னை (7 விக்கெட், 5விக்கெட்) ஆகிய அணிகளிடம் தலா 2 முறை தோற்று இருந்தது.
ஏற்கனவே பெங்களூர் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்ததால் மீண்டும் தோற்கடித்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.
கொல்கத்தா அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோற்றது. அந்த தோல்வியில் இருந்து மீளுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்த்ரே ரஸ்சல், (322 ரன்), கிறிஸ்லின் (212 ரன்), நிதிஷ் ரானா (201 ரன்) போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், சுனில் நரீன், பியூஸ் சாவ்லா போன்ற சிறந்த பவுலர்களும் கொல்கத்தாவில் உள்ளனர்.
பெங்களூர் அணி 1 வெற்றி, 7 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை பெற அந்த அணிக்கு மிகவும் கடினமே. எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.
அந்த அணி பஞ்சாப்பை மட்டும் 8 விக்கெட்டில் வென்றது. மும்பையிடம் 2 முறையும் (6 ரன், 5 விக்கெட்), சென்னை (7 விக்கெட்), ஐதராபாத் (118 ரன்), ராஜஸ்தான் (7 விக்கெட்), கொல்கத்தா (5 விக்கெட்), டெல்லி (4 விக்கெட்) ஆகியவற்றிடம் ஒருமுறையும் தோற்றது.
விராட்கோலி (278 ரன்), டிவில்லியர்ஸ் (307 ரன்), யசுவேந்திர சாஹல் (13 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் இருந்தும் பெங்களூர் அணி முன்னேற்றம் அடையாமல் இருப்பது பரிதாபமே. #IPL2019 #KKRvRCB

Next Story
×