என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரே நேரத்தில் இரண்டு பதவிகள்- கங்குலிக்கு பிசிசிஐ நோட்டீஸ்
Byமாலை மலர்4 April 2019 5:03 AM GMT (Updated: 4 April 2019 11:35 AM GMT)
ஆதாயம் பெறும் வகையில் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகள் தொடர்பான புகாருக்கு விளக்கம் அளிக்கும்படி கங்குலிக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #SouravGanguly #DelhiCapitals #BCCI
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக உள்ளார். அத்துடன், இந்த ஐ.பி.எல். சீசனுக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து கங்குலி ஆதாயம் பெறும் வகையில் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகள் வகிப்பதாக கொல்கத்தாவை சேர்ந்த 3 பேர் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து இதுபோன்ற புகார்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரியான முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின், இரட்டை ஆதாயம் சர்ச்சை குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி கங்குலிக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 12ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. அந்த போட்டியின்போது, மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவரான கங்குலி, எப்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு செயல்பட முடியும்? என்ற கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #SouravGanguly #DelhiCapitals #BCCI

Next Story
×