search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்வேறு சாதனைகளை உடைத்தெறிந்த டேவிட் வார்னர் - பேர்ஸ்டோவ் ஜோடி
    X

    பல்வேறு சாதனைகளை உடைத்தெறிந்த டேவிட் வார்னர் - பேர்ஸ்டோவ் ஜோடி

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் டேவிட் வார்னர் - பேர்ஸ்டோவ் ஜோடி பல்வேறு சாதனைகளை உடைத்தெறிந்துள்ளது. #SRHvRCB
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது.

    பேர்ஸ்டோவ், வார்னர் ஆகியோர் சதம் அடித்தனர். பேர்ஸ்டோவ் 56 பந்தில் 114 ரன்களும், டேவிட் வார்னர் 55 பந்தில் 100 ரன்களும் சேர்த்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 16.2 ஓவரில் 185 ரன்கள் குவித்தனர். இதன்மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

    2017 ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் காம்பிர் - கிறிஸ் லின் ஜோடி ஆட்டமிழக்காமல் 184 ரன்கள் அடித்திருந்தது. இதுதான் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆக இருந்தது. தற்போது இந்த ஜோடி அந்த சாதனையை உடைத்தெறிந்துள்ளது.

    ஆர்சிபி அணியின் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோர் ஒரே ஆட்டத்தில் சதம் அடித்திருந்தனர். அதன்பின் தற்போது வார்னர், பேர்ஸ்டோவ் சதம் அடித்துள்ளனர்.



    இந்த சதம் மூலம் வார்னர் ஐபிஎல் தொடரில் நான்கு சதங்கள் அடித்து கோலி, வாட்சன் சாதனையுடன் 2-வது இடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல் 6 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    பேர்ஸ்டோவ் 3-வது இன்னிங்சிலேயே சதம் அடித்து சைமண்ட்ஸ் உடன் 2-வது இடத்தை பிடித்துள்ளார். பிராண்டன் மெக்கல்லம், மைக் ஹசி ஆகியோர் தங்களது முதல் இன்னிங்சிலேயே சதம் அடித்து சாதனைப் படைத்திருந்தனர்.

    இந்த ஜோடி மூன்று போட்டிகளிலும் 100-க்கு மேல் ரன் குவித்துள்ளது. இதன்மூலம் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்னைக் கடந்த முதல் ஜோடி என்ற சாதனையைப் படைத்துள்ளது.
    Next Story
    ×