search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்னுடைய நாளை முற்றிலும் சிதைத்து விட்டீர்கள்: வார்னரை பார்த்து சஞ்சு சாம்சன் சொல்கிறார்
    X

    என்னுடைய நாளை முற்றிலும் சிதைத்து விட்டீர்கள்: வார்னரை பார்த்து சஞ்சு சாம்சன் சொல்கிறார்

    என்னுடைய நாளை முற்றிலும் சிதைத்து விட்டீர்கள் என்று வார்னரை பார்த்து சஞ்சு சாம்சன் கவலையோடு தெரிவித்துள்ளார். #IPL2019 #SRHvRR
    ஐபிஎல் தொடரின் 8-வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. ரகானே 70 ரன்களும், சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 55 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 102 ரன்களும் சேர்த்தனர். சஞ்சு சாம்சனின் சதம் இந்த சீசனின் முதல் சதமாகும்.

    அதன்பின் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் களம் இறங்கியது. டேவிட் வார்னர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 37 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 69 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 9.4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் குவித்தது. இதுவே வெற்றிக்கு முக்கியம்சமாக அமைந்தது.

    தொடர்ந்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேர்ஸ்டோவ் (45), விஜய் சங்கர் (35) ரஷித் கான் (ஆட்டமிழக்காமல் 8 பந்தில் 15 ரன்) ஆகியோர் சிறப்பாக விளையாட, 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்த சீசனில் முதல் சதம் அடித்த சஞ்சு சாம்சன், என்னுடைய சதத்தை சிதைத்துவிட்டீர்கள் என்று வார்னரை பார்த்து தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில் ‘‘என்னுடைய நாளை நீங்கள் சிதைத்து விட்டீர்கள். உங்களுடைய பேட்டிங் வேகத்தை பார்க்கும்போது, என்னுடைய சதம் போதுமானதாக இல்லை. நீங்கள் போட்டியை தொடங்கிய விதம், பவர்பிளே-யிலேயே நாங்கள் தோற்றுவிட்டோம். உங்களை போன்ற வீரர்கள் எதிரணியில் இருக்கும்போது 250 ரன்கள் அடித்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் விளையாடியது மிகவும் சிறப்பானது.

    ரகானே என்னிடம் 170 ரன்களுக்கு மேலான ஸ்கோர் போதுமானது என்று கூறினார். ஆனால் ஆடுகளம் பேட்டிங் செய்ய உதவிகரமாக இருந்து விட்டது. நாங்கள் ஆட்டத்தை தொடங்கியபோது ஆடுகள் சிறப்பாக இல்லை. அவர்களுக்கு தொடக்கத்தில் சிறப்பாக அமைந்துவிட்டது. 200 சிறந்த ரன்கள் என்று நினைத்தோம். அவர்கள் விளையாடியதை பார்க்கும்போது 200 குறைந்த ஸ்கோர்தான்’’ என்றார்.
    Next Story
    ×