search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிர்ஷ்டம் இல்லாத விஜய் சங்கர்: வாய்ப்பு கிடைத்த இரண்டு முறையும் ரன்அவுட் ஆகி சோகம்
    X

    அதிர்ஷ்டம் இல்லாத விஜய் சங்கர்: வாய்ப்பு கிடைத்த இரண்டு முறையும் ரன்அவுட் ஆகி சோகம்

    நியூசிலாந்துக்கு எதிராக 45 ரன்னில் ரன்அவுட் ஆகி அரைசதம் வாய்ப்பை இழந்த விஜய் சங்கர், இன்றும் 46 ரன்னில் ரன்அவுட் ஆகினார். #VijayShankar
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. முன்னணி வீரர்களான ரோகித் சர்மா (0), தவான் (21) மற்றும் அம்பதி ராயுடு (18) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 75 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.

    அப்போது விராட் கோலி களத்தில் இருந்தார். 17 ஓவர்கள் மட்டுமே முடிந்திருந்ததால் கேதர் ஜாதவ் மற்றும் டோனி ஆகியோரை களமிறக்காமல் விஜய் சங்கர் களமிறக்கினார் விராட் கோலி.

    விராட் கோலியின் நம்பிக்கையை வீணடிக்காமல் விஜய் சங்கர் அற்புதமாக விளையாடினார். பந்துக்கு பந்து ரன்கள் அடித்தும், சிறப்பாக சிங்கிள் அடித்து கோலிக்கு உதவினார். நேரம் ஆகஆக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    41 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 46 ரன்கள் அடித்து பார்மில் இருந்தார். 29-வது ஓவரை ஆடம் ஜம்பா வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை விராட் கோலி ஸ்டிரெய்ட் ஷாட்-ஆக விளையாடினார். மின்னல் வேகத்தில் எதிர்முனை ஸ்டம்பை நோக்கி வந்த பந்தை ஜம்பா தடுக்க முயற்சி செய்தார். அப்போது அவரது கையில் பந்து பட்டு ஸ்டம்பை தாக்கியது.

    அப்போது விஜய் சங்கர் க்ரீஸை விட்டு வெளியே நின்றதால் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். இன்று நல்ல பார்மில் இருந்த விஜய் சங்கர், ரன்அவுட் ஆகாமல் இருந்திருந்தால் அரைசதம் அடித்ததோடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்து தனது திறமையை நிரூபித்திருப்பார்.

    ஆனால் ரன்அவுட் அவரது பொன்னான வாய்ப்பை தட்டிப்பறித்து விட்டது. இதற்கு முன் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் களம் இறங்கிய விஜய் சங்கர், இந்தியா தடுமாறிய நிலையில் அம்பதி ராயுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டியிலும் ரன்அவுட் ஆனார்.

    இதுவரை 6 போட்டிகளில் விஜய் சங்கர் விளையாடிள்ளார். இதில் இரண்டு போட்டிகளில் மட்டுமே பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு போட்டிகளிலும் முறையோ 45 மற்றும் 46 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆகியுள்ளார்.
    Next Story
    ×