search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாமஸ் விக்கெட் மழை, கிறிஸ் கெய்ல் சிக்சர் மழை: இங்கிலாந்தை துவம்சம் செய்து தொடரை சமன் செய்தது வெஸ்ட் இண்டீஸ்
    X

    தாமஸ் விக்கெட் மழை, கிறிஸ் கெய்ல் சிக்சர் மழை: இங்கிலாந்தை துவம்சம் செய்து தொடரை சமன் செய்தது வெஸ்ட் இண்டீஸ்

    கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 113 ரன்களில் சுருட்டியதோடு, 12.1 ஓவரிலேயே இலக்கை எட்டி தொடரை 2-2 என சமன் செய்தது வெஸ்ட் இண்டீஸ். #WIvENG
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கிராஸ் ஐலேட்டில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. பேர்ஸ்டோவ், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பேர்ஸ்டோவ் 11 ரன்கள் எடுத்த நிலையில் காட்ரெல் பந்தில் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் ஹேல்ஸை 23 ரன்னில் பிராத்வைட் வீழ்த்தினார். நம்பிக்கை நட்சத்திர வீரரான ஜோ ரூட்டை 1 ரன்னில் வெளியேற்றினார் கேப்டன் ஹோல்டர்.

    அதன்பின் வந்தவர்களை வேகப்பந்து வீச்சாளர் தாமஸ் வரிசையாக வெளியேற்ற இங்கிலாந்து 113 ரன்னில் சுருண்டது. அந்த அணியால் 28.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஒசானே தாமஸ் 5.1 ஓவரில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார்.



    பின்னர் 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல், கேம்ப்பெல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் கெய்ல் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 27 பந்தில் 5 பவுண்டரி, 9 சிக்சருடன் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட்டுக்களை இழந்தாலும் 12.1 ஓவரிலேயே 115 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 2-2 என சமன் செய்தது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
    Next Story
    ×