search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பைக்கான வீரர்களின் தேர்வில் ஐபிஎல் தாக்கத்தை ஏற்படுத்தாது: கோலி நம்பிக்கை
    X

    உலகக்கோப்பைக்கான வீரர்களின் தேர்வில் ஐபிஎல் தாக்கத்தை ஏற்படுத்தாது: கோலி நம்பிக்கை

    உலகக்கோப்பைக்கான வீரர்களின் தேர்வில் ஐபிஎல் தொடர் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் பார்க்கவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார். #INDvAUS
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது. இங்கிலாந்தில் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் இந்தியா விளையாடும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் தொடர் இதுவாகும்.

    இந்த தொடரில் பரிசோதனைகள் செய்து இந்திய அணி ஏறக்குறைய வீரர்களை தேர்வு செய்துவிடும். உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி, 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை ஐசிசி-யிடம் அளிக்க ஏப்ரல் கடைசி வாரம் வரை அவகாசம் உள்ளது.

    இதற்கிடையில் ஐபிஎல் தொடர் 23-ந்தேதி தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் ஐபிஎல் போட்டிக்குப் பின்புதான் வீரர்கள் பட்டியல் தெரியவரும். இந்த ஒருமாதத்தில் இந்திய அணியின் தேர்வுக்குழுவில் இருக்கும் வீரர்களின் சிலர் சரியாக விளையாடாமல் போகலாம், சில இளம் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம்.

    இதனால் வீரர்கள் மாற்றப்படலாம் என்ற கருத்து நிலவியது. இந்நிலையில் இன்று பேட்டியளித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி ‘‘உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வில் ஐபிஎல் ஆதிக்கம் செலுத்துவதாக நான் பார்க்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘12 முதல் 13 இடங்களுக்கு வீரர்களை தயார் செய்துள்ள நிலையில், உலகக்கோப்பைக்கான தேர்வில் ஐபிஎல் கிரிக்கெட் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் பார்க்கவில்லை. உலக்ககோப்பைக்கான தேர்வு மிகமிக பகுத்தாய்வு வகையில் இருக்கும்.

    எங்களுக்கு நிலையான அணி தேவையானது. ஐபிஎல் தொடருக்கு முன்னரே, எப்படிப்பட்ட அணியை நாம் மெகா தொடரான உலகக்கோப்பைக்கு கொண்டு செல்ல விரும்புகிறோம் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பது அவசியமானது. ஐபிஎல் தொடரில் வீரர்கள் எப்படி விளையாடினாலும், எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்துவதாக என்னால் பார்க்க முடியவில்லை.

    ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை என்றால், அவர்கள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வில் இருந்து விலகிவிடுவார் என்று அர்த்தம் கிடையாது. இந்த விஷயங்கள் பெரிய பிரச்சினையாக உருவாகாது.

    நாங்கள் அணியின் காம்பினேசன் குறித்து யோசிக்க இருக்கிறோம். குறைந்த பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடுவது குறித்து நான் யோசிக்கவில்லை. பேட்டிங் சில காம்பினேசனை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். ஆனால், பந்து வீச்சை காம்பினேசனை மாற்ற விரும்பவில்லை’’ என்றார்.
    Next Story
    ×