search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா நாளை மோதல்
    X

    முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா நாளை மோதல்

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நாளை நடக்கிறது. #AUSvIND

    ஐதராபாத்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், பெங்களூரில் நடந்த 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வென்றது.

    அடுத்து இரு அணிகளும் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒரு நாள் போட்டி நாளை ஐதராபாத்தில் நடக்கிறது.இந்த ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகிர்சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் டோனி, லோகேஷ்ராகுல், ரி‌ஷப்பண்ட் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    பந்து வீச்சில் பும்ரா, முகமது சமி, சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் உள்ளனர். ஆல் ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    20 ஓவர் தொடரை இழந்ததால் ஒரு நாள் போட்டி தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

    ஒரு நாள் போட்டி தொடரை வெல்வோம் என்று கேப்டன் கோலி நம்பிக்கை தெரிவித்தார். 2-வது கோப்பை போட்டிக்கு ஆயத்தமாக ஆஸ்திரேலியாவுக்கு இந்த தொடரை இந்திய வீரர்கள் பயன்படுத்தி கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் தொடரை வென்றதால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

    அந்த அணியில் உஸ்மான் கலாஜா, ஷான்மார்ஷ், ஹார்ட், பீட்டர் ஹேண்ட்ஸ் கோம்ப், கிளைன் மேக்ஸ் வெல், அலெக்ஸ் சாரே, மார்கஸ் ஆகிய ஸ்டோனிஸ் பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    பந்து வீச்சில் கும்மின்ஸ், நாதன் கோல்மடர்நைல், நாதன் லயன், ஆடம் ஜம்பா, ஜேய் ரிச்சர்டசன், ஆண்ட்ரூடை ஆகியோர் உள்ளனர்.

    20 ஓவர் தொடரில் சிறப்பாக விளையாடிய மேக்ஸ்வெல் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளார். பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, ஷிகர்தவான், அம்பதிராயுடு, ரி‌ஷப்பண்ட், டோனி விஜய்சங்கர், கேதர் ஜாதவ், சோகேர் ராகுல், ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், முகமது ‌ஷமி, பும்ரா, சித்தார்த் கவுல்.

    ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஷார்ட், கவாஜா, அலெக்ஸ் காரே, ஷான்மார்ஷ், ஹேண்ட்ஸ் கோம்ப், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆஸ்டன் டர்னர் ஆடம் ஜம்பா, ஜேல் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூடை, கும்மின்ஸ், நாதன், கோல்டன் நைல், நாதன் லயன், ஜேசன், பென்ரென் டோரப். #AUSvIND

    Next Story
    ×