search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கெய்ல் போன்று எளிதாக சிக்ஸர் விளாசும் ஒரு வீரரை நான் பார்த்ததே இல்லை- பட்லர் புகழாரம்
    X

    கெய்ல் போன்று எளிதாக சிக்ஸர் விளாசும் ஒரு வீரரை நான் பார்த்ததே இல்லை- பட்லர் புகழாரம்

    கிறிஸ் கெய்ல் போன்று எளிதாக சிக்ஸர் விளாசும் ஒரு வீரரை நான் பார்த்ததே இல்லை என்று பட்லர் புகழாரம் சூட்டியுள்ளார். #WIvENG
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ஜோஸ் பட்லர் 77 பந்தில் 13 பவுண்டரி, 12 சிக்சருடன் 150 ரன்கள் குவித்தார்.

    பின்னர் 419 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. கிறிஸ் கெய்லின் ருத்ரதாண்டவத்தால் வெஸ்ட் இண்டீஸ் 389 ரன்கள் குவித்து வெற்றியை பறிகொடுத்தது.

    கெய்ல் 97 பந்தில் 11 பவுண்டரி, 14 சிக்சருடன் 162 ரன்கள் குவித்தார். இருவரும் சேர்ந்து 26 சிக்சருடன் தூக்கினர். கிரிக்கெட்டில் சிக்ஸர் மன்னன் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படுகிறது.

    நேற்றைய போட்டியை பார்த்தபின் யார் சிறந்த ஹிட்டர் என்ற விவாதம் கிளம்பியது. இந்நிலையில் ஜோஸ் பட்லர் ‘‘கிறிஸ் கெய்ல் போன்று எளிதாக சிக்ஸர் விளாசும் ஒரு வீரரை நான் பார்த்ததே இல்லை. கிரிக்கெட்டின் லெஜெண்ட் கெய்ல்’’ என்றார்.

    கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘தற்போதைய நிலையில் உலகின் தலைசிறந்த ஹிட்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜோ பட்லர். ஆனால், அவர் யுனிவர்ஸ் பாஸ் என்ற நிலையை நெருங்கவில்லை’’ என்றார்.
    Next Story
    ×