search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்கா டி20 அணியின் கேப்டனாக டேவிட் மில்லர் நியமனம்
    X

    தென்ஆப்பிரிக்கா டி20 அணியின் கேப்டனாக டேவிட் மில்லர் நியமனம்

    பாகிஸ்தான் அணிக்கெதிரான கடைசி இரண்டு டி20 போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக டேவிட் மில்லர் நியமிக்கப்பட்டுள்ளார். #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட், ஒருநாள் தொடர் முடிந்துள்ள நிலையில் தற்போது தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    மூன்று போட்டிகள் கொண்ட இந்தத்தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அந்த அணியின் கேப்டன் டு பிளிசிஸ் 45 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 78 ரன்கள் குவித்தார்.

    தற்போது அவர் கடைசி இரண்டு போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் இடது கை பேட்ஸ்மேன் ஆன டேவிட் மில்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×