search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கான்பெர்ரா டெஸ்ட்: இலங்கைக்கு 516 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
    X

    கான்பெர்ரா டெஸ்ட்: இலங்கைக்கு 516 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

    கான்பெர்ராவில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இலங்கைக்கு 516 என்ற இமாலய ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா #AUSvSL
    கான்பெர்ரா:

    ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பெர்ராவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 534 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஜோ பேர்ன்ஸ் (180 ரன்), டிராவிஸ் ஹெட் (161 ரன்), பேட்டர்சன் (114 ரன்) ஆகியோர் சதம் அடித்தனர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. நேற்றைய ஆட்டத்தில் பவுன்சர் பந்து தாக்கி நிலைகுலைந்த இலங்கை தொடக்க வீரர் கருணாரத்னே இன்று தொடர்ந்து ஆடினார். அவர் 59 ரன்னில் ஆட்டம் இழந்தார். குசால் பெரேரா கம்மின்ஸ் பவுன்சரில் காயம் அடைந்தார். அவர் 29 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.


    உஸ்மான் கவாஜா

    கடைநிலை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி முதல் இன்னிங்சில் 215 ரன்கள் எடுத்து ‘ஆல்அவுட்’ ஆனது. மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டும் நாதன் லயன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 319 ரன்கள் முன்னிலை பெற்றது. பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் விளையாடியது.

    உஸ்மான் கவாஜா 101 ரன்னும், டிராவிஸ் ஹெட் 59 ரன்னும் அடிக்க ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.


    டிராவிஸ் ஹெட்

    மொத்தமாக ஆஸ்திரேலியா 515 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 516 என்ற இமாலய ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. 516 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. அந்த அணி இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்துள்ளது.
    Next Story
    ×