search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்துக்கு எதிராக இரட்டை சதம்: ஜேசன் ஹோல்டர் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் நமபர் ஒன்
    X

    இங்கிலாந்துக்கு எதிராக இரட்டை சதம்: ஜேசன் ஹோல்டர் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் நமபர் ஒன்

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய ஜேசன் ஹோல்டர் ஆல்-ரவுண்டருக்கான ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார். #ICC
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 289 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 77 ரன்னில் சுருண்டது. ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 415 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் கேப்டனும், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டருமான ஜேசன் ஹோல்டர் இரட்டை சதம் விளாசினார்.

    இதன்மூலம் ஐசிசி-யின் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் இருந்து ஷாகிப் அல் ஹசன் 2-வது இடத்திற்கும், 2-வது இடத்தில் இருந்து ஜடேஜா 3-வது இடத்திற்கும் பின்தங்கினர்.

    இதற்கு முன் 1974-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டராக இருந்த கேரி சோபர்ஸ் ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் இடம்பிடித்திருந்தார். அதன்பின் 45 வருடங்கள் கழித்து ஜேசன் ஹோல்டர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
    Next Story
    ×