என் மலர்

  செய்திகள்

  கொல்கத்தாவில் துயரம்: கிரிக்கெட் மைதானத்தில் சுருண்டு விழுந்து 21 வயது இளைஞர் மரணம்
  X

  கொல்கத்தாவில் துயரம்: கிரிக்கெட் மைதானத்தில் சுருண்டு விழுந்து 21 வயது இளைஞர் மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொல்கத்தாவில் கிரிக்கெட் போட்டிக்காக தயாராகும்போது 21 வயது இளைஞர் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  பெங்கால் கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் ‘டிவிசன் 1’ லீக் போட்டியில் மிலன் சமிதி -  பைக்பாரா அணிகள் மோத இருந்தன. பைக்பாரா அணியில் 21 வயதான அனிகெட் இடம் பிடித்திருந்தார். வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் கடந்த வருடம்தான் பைக்பாரா கிளப்பில் இணைந்தார்.

  மைதானத்தில் சக வீரர்களுடன் பயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கால்பந்து விளையாட விரும்பியுள்ளார். அதற்காக பயிற்சியில் ஈடுபட்டபோது திடீரென சுருண்டு மைதானத்தில் விழுந்துள்ளார். உடனடியான சகவீரர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அனிகெட் உடலை பரிசோதித்த செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டார் என அறிவித்தனர்.

  இதனால் பைக்பாரா அணி வீரர்கள் சோகத்தில் மூழ்கினர். ‘‘அனிகெட் சிறந்த கிரிக்கெட்டர். அவர் மிகவும் அறிவான வீரர். அத்துடன் சிறந்த பீல்டர். நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம்’’ என பயிற்சியாளர் தெரிவித்தார்.
  Next Story
  ×