search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேட்ச் பிடிக்கும்போது காலில் காயம்- முதல் டெஸ்டில் இருந்து பிரித்வி ஷா விலகல்
    X

    கேட்ச் பிடிக்கும்போது காலில் காயம்- முதல் டெஸ்டில் இருந்து பிரித்வி ஷா விலகல்

    பயிற்சி ஆட்டத்தில் கேட்ச் பிடிக்கும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் பிரித்வி ஷா அடிலெய்டு டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். #Prithvishaw
    சிட்னி:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

    டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவனுடன், இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது.

    இந்த பயிற்சி ஆட்டம் நேற்றுமுன்தினத்தில் இருந்து சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா டீப் மிட்விக்கெட் திசையில் பவுண்டரி லைன் அருகில் ஜம்ப் செய்து கேட்ச் பிடிக்க துள்ளிய அவர், காலை கீழே வைக்கும்போது தடுமாறினார். இதனால் கணுக்காலில் காயம் அடைந்து வலியால் துடித்தார்.



    இதையடுத்து, உடனடியாக மருத்துவ குழுவினரின் உதவியுடன் மைதானத்தை விட்டு பிரித்வி ஷா வெளியேறினார். அவரது காயம் குறித்து அறிய ஸ்கேன் செய்யப்பட இருக்கிறது. காயத்தில் இருந்து விரைவாக மீண்டுவதற்கான சிகிச்சையை மருத்துக்குழு மேற்கொண்டு வருகிறது.
    Next Story
    ×