search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக வலைத்தளங்களில் பூதாகரமாக வெடித்த நிலையில், விராட் கோலி விளக்கம்
    X

    சமூக வலைத்தளங்களில் பூதாகரமாக வெடித்த நிலையில், விராட் கோலி விளக்கம்

    தன்னுடைய கருத்து சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பூதாகரமாக வெடித்த நிலையில், விராட் கோலி டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். #ViratKohli
    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய பிறந்த நாளன்று இணையதளவாசிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது விராட் கோலியின் பேட்டிங்கை விட, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பேட் செய்வதுதான் எனக்கு பிடிக்கும் என ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

    இதற்கு காட்டமாக பதிலளித்த விராட் கோலி, இந்த கருத்தை கூறிய ரசிகர் இந்தியாவில் வசிப்பதைவிட, நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது வசிக்கலாம் என பதிலளித்திருந்தார்.

    இது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி விராட் கோலியை ட்ரோல் செய்தனர். இந்த விவகாரம் பிசிசிஐ வரை சென்று, பிசிசிஐ பொருளாளர் விராட் கோலிக்கு எதிராக கருத்தையும் பதிவு செய்தார். பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு விராட் கோலியிடம் இதுகுறித்து விளக்கம் கேட்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
    Next Story
    ×