search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிக்பாஷ் டி20 லீக்- சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஒப்பந்தம் ஆனார் லாய்டு போப்
    X

    பிக்பாஷ் டி20 லீக்- சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஒப்பந்தம் ஆனார் லாய்டு போப்

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் 8 விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளரான போப் பிக்பாஷ் அணியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். #BigBash
    நியூசிலாந்தில் இந்த வருட தொடக்கத்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் லெக் ஸ்பின்னரான ஆஸ்திரேலியாவின் லாய்டு போப் சிறப்பாக பந்து வீசினார்.

    இங்கிலாந்துக்கு எதிராக 35 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் சாய்த்தார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரில் குயின்ஸ்லாந்து அணிக்கெதிராக 87 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தினார்.



    இந்நிலையில் இளம் வீரரான லாய்டு போப்பை பிக்பாஷ் தொடரில் விளையாடும் சிட்னி சிக்சர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.  19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடிய பிரித்வி ஷா இந்திய அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×