search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காள தேசம் வெற்றிக்கு 247 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே
    X

    வங்காள தேசம் வெற்றிக்கு 247 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே

    2-வது ஒருநாள் போட்டியில் வங்காள தேச அணியின் வெற்றிக்கு 247 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஜிம்பாப்வே. #BANvZIM
    வங்காள தேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வங்காள தேசம் வெற்றி பெற்றிருந்தது.

    இந்நிலையில் சிட்டகாங்கில் 2-வது ஒருநாள் போட்டி பகல் - இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காள தேசம் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க வீரர்கள் மசகட்சா (14), செப்ஹாஸ் (20) சொற்ப ரன்களில் வெளியேறினாலும், அடுத்து வந்த பிராண்டன் டெய்லர் (75), வில்லியம்ஸ் (47), சிகந்தர் ரசா (47) சிறப்பாக விளையாடினார்கள். இதனால் ஜிம்பாப்வே 50 ஓவரில் 10 விக்கெட்டுக்களையும் இழந்து 246 ரன்கள் சேர்த்தது. இதனால் வங்காள தேச அணியின் வெற்றிக்கு 247 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
    Next Story
    ×