search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பாக விளையாடி பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்துவோம்  - ரோகித்சர்மா நம்பிக்கை
    X

    சிறப்பாக விளையாடி பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்துவோம் - ரோகித்சர்மா நம்பிக்கை

    இன்றைய ஆசிய கோப்பை போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி அந்த அணியை மீண்டும் வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக கேப்டன் ரோகித்சர்மா கூறியுள்ளார். #AsiaCup2018 #RohitSharma
    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதன் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

    ‘சூப்பர் 4’ சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். நேற்று முன்தினம் ‘குரூப் 4’ சுற்று போட்டிகள் தொடங்கியது.

    தொடக்க ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை போராடி தோற்கடித்தது.

    3-வது ‘லீக்‘ ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி ‘லீக்‘ ஆட்டத்தில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் வென்று இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்துடன் இருக்கிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் வேட்கையில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    இன்றைய ஆட்டம் குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-


    ஆசிய கோப்பை போட்டியில் எங்களது செயல்பாடு நன்றாக இருக்கிறது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளோம். ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக நன்றாக ஆடி இருக்கிறோம். வங்காள தேசத்துக்கு எதிராகவும் மிகவும் சிறப்பாக ஆடினோம்.

    இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி அந்த அணியை மீண்டும் வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அபுதாயில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோற்று இருந்தது. இதனால் இந்தப் போட்டியில் தோற்கும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

    ஆப்கானிஸ்தான் அணி ‘லீக்‘ ஆட்டத்தில் வங்காள தேசத்தை 136 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. #AsiaCup2018 #INDvPAK #RohitSharma
    Next Story
    ×