என் மலர்

  செய்திகள்

  தவான் சதம், அம்பதி ராயுடு அரைசதத்தால் ஹாங் காங்கிற்கு 286 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா
  X

  தவான் சதம், அம்பதி ராயுடு அரைசதத்தால் ஹாங் காங்கிற்கு 286 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தவான், அம்பதி ராயுடு ஆட்டத்தால் ஹாங் காங் வெற்றிக்கு 286 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #AsiaCup2018 #Dhawan #Rayudu
  ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - ஹாங் காங் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற  ஹாங் காங் அணி கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

  இந்தியா 7.4 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருக்கும்போது ரோகித் சர்மா 22 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

  இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இந்தியாவின் ஸ்கோர் 29.2 ஓவரில் 161 ரன்கள் எடுத்திருக்கும்போது அம்பதி ராயுடு 70 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு தவான் - அம்பதி ராயுடு ஜோடி 116 ரன்கள் சேர்த்தது.

  3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடித்த தவான், அதை சதமாக மாற்றினார். இந்தியா 198 ரன் எடுத்திருக்கும்போது 36-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து தவான் 105 பந்தில் 13 பவுண்டரின் சதம் அடித்தார். இது தவானின் 14-வது சர்வதேச சதமாகும்.


  அரைசதம் அடித்த அம்பதி ராயுடு

  தொடர்ந்து விளையாடிய தவான் 127 ரன்னில் ஆட்டமிழந்தார். தவான் ஆட்டமிழக்கும்போது இந்தியா 40.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்தது. அதன் வந்த டோனி (0), தினேஷ் கார்த்திக் (33), சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியாவின் ஸ்கோர் சரிய ஆரம்பித்தது.

  கேதர் ஜாதவ் தாக்குப்பிடித்து ஆட்டமிழக்காமல் 27 பந்தில் 28 ரன்கள் சேர்க்க இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்தது. இதனால் ஹாங் காங் அணிக்கு 286 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஹாங் காங் அணி சார்பில் சின்சிட் ஷா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
  Next Story
  ×