என் மலர்

  செய்திகள்

  அமெரிக்கா கிராண்ட் ஸ்லாத்தை வென்று 3-வது இடத்திற்கு முன்னேறினார் ஜோகோவிச்
  X

  அமெரிக்கா கிராண்ட் ஸ்லாத்தை வென்று 3-வது இடத்திற்கு முன்னேறினார் ஜோகோவிச்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்கா கிராண்ட் ஸ்லாத்தை வென்றதன் மூலம் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு முதல் மூன்று இடத்திற்குள் முன்னேறியுள்ளார் ஜோகோவிச். #Djokovic #NaomiOsaka
  அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

  இது அவரின் 14-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இந்த சாம்பியன் பட்டம் மூலம் உலக டென்னிஸ் தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதல் மூன்று இடத்திற்குள் வந்துள்ளார். நடால் முதல் இடத்திலும், ரோஜர் பெடரர் 2-வது இடத்திலும் உள்ளனர்.  பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா செரீனா வில்லியம்சை வீழ்த்தி முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். இதன்மூலம் 12 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். செரீனா வில்லியம்ஸ் 26-வது இடத்தில் இருந்து 16-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
  Next Story
  ×