search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிவியூ கேட்கும் விராட் கோலி (பழைய படம்)
    X
    ரிவியூ கேட்கும் விராட் கோலி (பழைய படம்)

    ‘ரிவியூ’ ஆப்சனில் விராட் கோலி உலகிலேயே மிகவும் வொர்ஸ்ட்- மைக்கேல் வாகன்

    ரிவியூ ஆப்சனை பயன்படுத்துவதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி உலகின் மிகவும் வொர்ஸ்ட் என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன்களும், இந்தியா 292 ரன்களும் சேர்த்தன.

    இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா இரண்டு ரிவியூ-களையும் விரைவாக இழந்தது. இதனால் சில வாய்ப்புகளில் நடுவர் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய இயலாமல் போனது.

    ஜோ ரூட் எல்பிடபிள்யூ ஆகும்போது பும்ரா அப்பீல் கேட்டார். நடுவர் நீண்ட நேரம் அவுட் கொடுக்கவில்லை. இதனால் பும்ரா சோர்ந்துவிட்டார். அவர் சோர்ந்த நிலையில் நடுவர் அவுட் கொடுத்தார். ஜோ ரூட் ரிவியூ கேட்டார். அதில் எந்தவித சந்தேகமின்றி ஜோ ரூட் அவுட் என தெரியவந்தது. ஒருவேளை நடுவர் அவுட் கொடுக்காமல் இருந்திருந்தால் ஜோ ரூட் டக்அவுட்டில் இருந்து தப்பியிருப்பார்.



    2-வது இன்னிங்சில் ஜடேஜா பந்து வீசும்போது அடுத்தடுத்த ஓவரில் ஜென்னிங்ஸ் (9.2) மற்றும் அலஸ்டைர் குக்கிற்கு (11.6) நடுவர் விக்கெட் கொடுக்காததால் விராட் கோலி ரிவியூ கேட்டார். அப்போது இருவரின் பேடும் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே இருக்கும்போது பந்து தாக்கியதால் ரிவியூ வாய்ப்பை இந்தியா இழந்தது.

    குறுகிய நேரத்திற்குள் இந்தியா ரிவியூ வாய்ப்பை இழந்ததால் இனிமேல் அதை பயன்படுத்த முடியாது. இந்நிலையில் ரிவியூ கேட்பதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி உலகிலேயே மிகவும் வொர்ஸ்ட் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×