search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்திக் பாண்டியாவை நீங்கள் வேண்டுமென்றால் அப்படி அழையுங்கள்- கவாஸ்கர் கடும்சாடல்
    X

    ஹர்திக் பாண்டியாவை நீங்கள் வேண்டுமென்றால் அப்படி அழையுங்கள்- கவாஸ்கர் கடும்சாடல்

    சவுத்தாம்ப்டன் டெஸ்டில் தோல்வியடைந்து இந்தியா தொடரை 3-1 இழந்ததால், ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். #ENGvIND
    சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 1-3 என இழந்துள்ளது. விராட் கோலி, ரகானே, புஜாரா ஆகியோர் சிறப்பாக விளையாடிய போதிலும், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    முதல் இன்னிங்சில் 4 ரன்னில் ஆட்டமிழந்த ஹர்திக் பாண்டியா 2-வது இன்னிங்சில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக எதிர்பார்த்த ஹர்திக் பாண்டியா சொதப்பியதால், முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நீங்கள் வேண்டுமென்னால் ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என்று அழைத்துக் கொள்ளுங்கள் என்று கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் பந்துகள் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஸ்விங் ஆகவில்லை என்பதை கவனித்தேன். எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸ் மைதானத்தில் பந்துகள் பந்து வீச்சாளர்கள் சொல்படி, கேட்டு ஸ்விங் ஆகும். இதனால், பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டு விளையாடுவது கடினமாக இருக்கும். ஆனால், சவுத்தாம்ப்டனில் அந்த வகையில் பேட்மேன்களுக்கு தொந்தரவில்லாத ஆடுகளமாக இருந்தபோது, தொடக்க ஆட்டக்காரர்கள் நிலைத்து விளையாடி இருக்க வேண்டும்.

    இன்னும், இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என்று கூப்பிட வேண்டுமா?. நீங்கள் வேண்டுமானால், ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டர் என்று கூப்பிடுங்கள், யார் வேண்டுமானாலும் கூப்பிடுங்கள். ஆனால், நான் ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராகவே நினைக்கவில்லை’’ என்றார்.



    ஹர்திக் பாண்டியா ஏதாவது ஒரு போட்டியில் சிறப்பாக பந்து வீசுவதையும், பேட் செய்வதையும் பார்த்து அவரை கபில்தேவுக்கு ஒப்பாகப் பேசினார்கள். ஆனால், கபில்தேவின் சாதனையை எட்ட இன்னும் ஏராளமான தொலைவை கடக்க வேண்டும் என்று எதிர்ப்பு கிளம்பியதும் அந்த பேச்சு அடங்கியது.

    அதற்கு ஏற்றார்போல், ஹர்திக் பாண்டியாவும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பினார். பின் 3-வது டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகள் எடுத்தவுடன் மீண்டும் ஹர்திக் பாண்டியாவை கபில்தேவுடன் ஒப்பிட்டுப் பேசினார்கள். அப்போது கருத்துத் தெரிவித்த ஹர்திக் பாண்டியா, நான் கபில்தேவாக மாறவில்லை, நான் ஹர்திக் பாண்டியாவாகவே இருக்கப் போகிறேன் என்று தெரிவித்திருந்தார். அவர் சொன்னதை சவுத்தாம்ப்டன் டெஸ்ட் போட்டியில் ஹர்திபாண்டியா நிரூபித்துவிட்டார்.
    Next Story
    ×