search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடரை இழக்க மூலக் காரணமாக அமைந்த 6, 7 மற்றும் 8-ம் வரிசை பேட்ஸ்மேன்கள்
    X

    தொடரை இழக்க மூலக் காரணமாக அமைந்த 6, 7 மற்றும் 8-ம் வரிசை பேட்ஸ்மேன்கள்

    இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 3-1 என இழக்க இந்தியாவின் 6,7 மற்றம் 8-ம் நிலை வீரர்களின் பேட்டிங் சொதப்பலே முக்கிய காரணமாக அமைந்தது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் இங்கிலாந்து 3 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த நிலையில் 1-3 என பின்தங்கி பரிதாப நிலையில் உள்ளது. கடைசி டெஸ்ட் லண்டனில் வரும் 7-ந்தேதி தொடங்குகிறது.

    மூன்று டெஸ்டில் லார்ட்ஸை தவிர மற்ற இரண்டு டெஸ்டிலும் இந்தியா மோசமான வகையில் தோற்கவில்லை. முதல் டெஸ்டில் 31 ரன்னிலும், 4-வது டெஸ்டில் 60 ரன்னிலும் தோல்வியடைந்தது.



    முடிந்துள்ள நான்கு டெஸ்டிலும் இரு அணி தொடக்க பேட்ஸ்மேன்களும் பெரிய அளவில் சாதிக்கவிலலை. 2, 3, 4 மற்றும் 5-ம் வரிசையில் இறங்கும் பேட்ஸ்மேன்களில் இங்கிலாந்தை விட இந்தியா பேட்ஸ்மேன்கள் சிறப்பாகவே செயல்பட்டார்கள்.

    ஆனால் ஆல்ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர் என 6, 7 மற்றும் 8-ம் வரிசையில் களம் இறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அசத்தினார்கள். இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்ப இந்தியா தோல்வியை சந்தித்தது.



    இங்கிலாந்து மண்ணில் முதல் 40 ஓவர் வரை விளையாடுவது சற்று கடினம். 40 ஓவர்கள் தாண்டி விட்டால், அதன்பின் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகாது. இதனால் 40 முதல் 80 வரை, அதாவது 2-வது புதுப்பந்து பயன்படுத்தும் வரை ரன்கள் சேர்ப்பது கடினம்.

    40 ஓவர்களுக்குள் முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் 120 முதல் 150 ரன்கள் சேர்த்து விடுவார்கள். அதன்பின் வருபவர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் முதல் இன்னிங்சில் 300 ரன்களை தாண்டி விடலாம்.



    இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்த முறையை சரியாக பயன்படுத்தினார்கள். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தொடர் இந்தியாவை விட்டு கைநழுவியது.

    முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அந்த அணியின் ஜோ ரூட் 80 ரன்களில் ரன்அவுட் ஆனார். அதன்பின் 6, 7 மற்றும் 8-ம் வரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இங்கிலாந்து 287 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஐந்து விக்கெட்டிற்குப் பிறகு 64 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.



    இதை இந்தியா சரியாக பயன்படுத்தவில்லை. 4-வது வீரராக களம் இறங்கிய விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 6, 7 மற்றும் 8-ம் நிலை வீரர்களான தினேஷ் கார்த்திக் (0), ஹர்திக் பாண்டியா (22), அஸ்வின் (10) ஆகியோர் 32 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.

    முகமது ஷமி, இஷந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோரை நம்ப முடியாது என்றாலும், விராட் கோலி அவர்களை வைத்துக் கொண்டு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் ரன்கள் சேர்த்தார். இதனால் இந்தியா 274 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியிருந்தால் இந்தியா 300 ரன்களை தாண்டியிருக்கும். அத்துடன் போட்டியின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.



    2-வது இன்னிங்சில் இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 8-ம் வரிசை வீரரான சாம் குர்ரான் 63 ரன்களும், 9-ம் வரிசை வீரர் ரஷித் 16 ரன்களும், அடுத்து வந்த பிராட் 11 ரன்களும் என 90 ரன்கள் சேர்த்தனர். இதனால் இங்கிலாந்து 180 ரன்கள் சேர்த்தனர்.

    இந்தியா 194 ரன்கள் அடித்தால வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் திணறிய நிலையில் 6-வது வீரராக களம் இறங்கிய அஸ்வின் (13), தினேஷ் கா்த்திக் (20), ஹர்திக் பாண்டியா (31) என 64 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் இந்தியா தோல்வியை சந்தித்தது.

    லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்னில் சுருண்டது. ஹர்திக் பாண்டியா (11), தினேஷ் கார்த்திக் (1), தினேஷ் கார்த்திக் (29) 41 ரன்களே சேர்த்தனர். அதேவேளையில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 131 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

    அதன்பின் வந்த 7-வது வீரராக களம் இறங்கிய கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 137 ரன்களும், சாம் 8 வீரராக களம் இறங்கிய சாம் குர்ரான் 40 ரன்கள் அடித்து போட்டியின் முடிவை மாற்றிவிட்டார்கள்.

    4-வது டெஸ்டில் இங்கிலாந்து 86 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்துக் கொண்டிருந்தது. அதன்பின் 7-வது வீரராக களம் இறங்கிய மொயீன் அலி 40 ரன்களும், 8-வது வீரராக களம் இறங்கிய சாம் குர்ரான் 78 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 246 ரன்கள் சேர்த்துவிட்டது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் என்ற வலுவான நிலையில்தான் இருந்தது. அதன்பின் வந்த ரிஷப் பந்த் (0), ஹர்திப் பாண்டியா (4), அஸ்வின் (1) அடுத்தடுத்து வெளியேறியதால் இந்தியா 273 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.



    2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள்தான் எடுத்திருந்தது. அதன்பின் 7-வது வீரராக களம் இறங்கிய பட்லர் 69 ரன்களும், 8-வது வீரராக களம் இறங்கிய சாம் குர்ரான் 46 ரன்களும், அடில் ரஷித் 11 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 271 ரன்கள் குவித்தது.

    இந்தியா 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த ஹர்திக் பாண்டியா (0), ரிஷப் பந்த் (18), அஸ்வின் (25), இஷாந்த் சர்மா (0), ஷமி (8) ரன்னில் வெளியேற இந்தியா தோல்வியை தழுவியது. 
    Next Story
    ×