search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிக்சர் மூலம் ஆட்டத்தை முடித்து இங்கிலாந்து கிரிக்கெட்டிடம் பாராட்டு பெற்ற ஹர்மன்ப்ரீத் கவுர்
    X

    சிக்சர் மூலம் ஆட்டத்தை முடித்து இங்கிலாந்து கிரிக்கெட்டிடம் பாராட்டு பெற்ற ஹர்மன்ப்ரீத் கவுர்

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பெண்களுக்கான சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    இங்கிலாந்தில் பெண்களுக்கான சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் சர்ரே ஸ்டார்ஸ் - லங்காஷைர் தண்டர் அணிகள் மோதின. இந்தியாவைச் சேர்ந்த முன்னணி வீராங்கனையான ஹர்மன்ப்ரீத் முதன்முறையாக லங்காஷைர் தண்டர் அணிக்காக களம் இறங்கினார்.

    முதலில் பேட்டிங் செய்த சர்ரே ஸ்டார்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்தது. பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லங்காஷைர் தண்டர் களம் இறங்கியது. லங்காஷைர் தண்டர் 18 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி இரண்டு ஓவரில் 13 ரன்கள்தான் தேவைப்பட்டது. போல்டன் 86 ரன்னுடனும், ஹர்மன்ப்ரீத் கவுர் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதனால் லங்காஷைர் தண்டர் அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்த்தனர்.

    ஆனால் 19-வது ஓவரில் போல்டன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லம்ப் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இநத ஓவர்ல் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்ததால் கடைசி ஓரில் 11 ரன்கள் தேவைப்பட்டது.

    கவுர் முதல் பந்தில் ஒரு ரன் அடித்தார். 2-வது பந்தில் மற்றொரு வீராங்கனை ரன்அவுட் ஆனார். இதனால் கடைசி நான்கு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 3-வது பந்தில் இரண்டு ரன்னும், 3-வது பந்தில் பவுண்டரியும் விளாசினார் ஹர்மன்ப்ரீத் கவுர்.

    இதனால் கடைசி இரண்டு பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ஐந்தாவது பந்தை அசால்டாக சிக்சருக்கு தூக்கி கவுர் அணியை வெற்றி பெற வைத்தார். கவுர் 21 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 34 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    முதல் போட்டியிலேயே முத்திரை பதித்த ஹர்மன்ப்ரீத் ஆட்டத்தை பாராட்டி, அவர் சிக்ஸ் அடித்த வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×