என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-தூத்துக்குடி இன்று மோதல்
Byமாலை மலர்28 July 2018 4:24 AM GMT (Updated: 28 July 2018 4:24 AM GMT)
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி அணியை சந்திக்கிறது. #TNPL2018 #CSG
சென்னை:
3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று (சனிக்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை சந்திக்கிறது.
கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் 4 லீக் ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்ததால் அடுத்த சுற்று வாய்ப்பை ஏறக்குறைய இழந்து விட்டது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஒருங்கிணைந்த ஆட்டம் இதுவரை கைகொடுக்காததால் அந்த அணி தடுமாறி வருகிறது. இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட 150 ரன்களை எட்டாத சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கணிசமான ஸ்கோரை குவித்தால் தான் வெற்றி கணக்கை தொடங்க முடியும். அத்துடன் எக்ஸ்டிரா வகையில் அதிக ரன்கள் விட்டுக்கொடுப்பதை கட்டுப்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும்.
கவுசிக் காந்தி தலைமையிலான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி முதல் 2 லீக் ஆட்டத்தில் வெற்றி கண்டது. அடுத்த 2 லீக் ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 4 முறையும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஒரு தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #TNPL2018 #CSG

Next Story
×