search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல் 2018 - காஞ்சி வீரன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்
    X

    டிஎன்பிஎல் 2018 - காஞ்சி வீரன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் காஞ்சி வீரன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்து மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. #TNPL2018 #KVvMP
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 15-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் காஞ்சி வீரன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. மதுரை பாந்தர்ஸ் அணியின் அருண் கார்த்திக், டி ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    அருண் கார்த்திக் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சற்குணம் 40 பந்தில் 7 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 62 ரன்கள் குவித்தார். டி ரோகித் 30 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின் வந்த வீரர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெகதீசன் கவுசிக் 20 பந்தில் 27 ரன்களும், அபிஷேக் தன்வார் 10 பந்தில் 22 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்துள்ளது.

    காஞ்சி வீரன்ஸ் சார்பில் தீபன் லிங்கேஷ், திவாகர் ஆகியோர் 3 விக்கெட்டும், ஆஷிக் ஸ்ரீனிவாஸ் 2விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காஞ்சி வீரன்ஸ் களமிறங்கியது. ஆனால் மதுரை பாந்தர்ஸ் அணியின் துல்லிய பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    காஞ்சி அணியில் விஷால் வைத்யா 31 ரன்களும், பாபா அபராஜித் 29 ரன்களும், மோகித் ஹரிஹரன் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோர் 34 ரன்களும் எடுத்தனர்.

    இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத்தொடர்ந்து மதுரை பாந்தர்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது தலைவன் சற்குணத்துக்கு வழங்கப்பட்டது.
    #TNPL2018 #KVvMP
    Next Story
    ×