search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனி பற்றிய வதந்திக்கு விளக்கம் அளித்த ரவி சாஸ்திரி
    X

    டோனி பற்றிய வதந்திக்கு விளக்கம் அளித்த ரவி சாஸ்திரி

    டோனி ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். #MSDhoni #Dhoni
    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான டோனி 2–வது ஆட்டத்தில் 59 பந்துகளில் 37 ரன்னும், கடைசி ஆட்டத்தில் 66 பந்துகளில் 42 ரன்னும் எடுத்தார். டோனியின் நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. லீட்சில் நேற்று முன்தினம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது.

    தோல்வி கண்டு வீரர்கள் அனைவரும் பெவிலியன் திரும்பியபோது டோனி, நடுவரிடம் இருந்து ஒரு பந்தை கேட்டு வாங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக தொடரை வென்றாலோ? அல்லது சிறப்பாக பந்து வீசினாலோ வீரர்கள் ஸ்டம்ப் அல்லது பந்தை நினைவாக எடுத்து செல்லுவார்கள்.

    தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரோ? என்ற சந்தேகத்தை எழுப்பிய கிரிக்கெட் ரசிகர்கள், டோனிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர். குறைந்த பட்சம்  2019-ம் ஆண்டு உலக கோப்பை வரையாவது டோனி விளையாட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் உருக்கமாக பதிவுகளை வெளியிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில், நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, டோனி  ஓய்வு குறித்து வெளியான பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.



    ரவிசாஸ்திரி கூறியதாக நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, “எம்.எஸ்.டோனி, எங்கும் போகவில்லை. மைதானத்தின் தன்மை மற்றும் ஆடுகளம் பற்றி பொதுவான விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம், விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட பந்தை காட்ட விரும்பினர்.

    எனவே, நடுவரிடம் இருந்து டோனி பந்தை வாங்கிச்சென்றார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவி சாஸ்திரியின் விளக்கத்தால், சில தினங்களாக பதறிப்போய் இருந்த டோனி, ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சை விட்டுள்ளனர்.
    Next Story
    ×