search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    116 வருடத்திற்குப் பிறகு இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்டில் ஒரே நாளில் அதிக விக்கெட்
    X

    116 வருடத்திற்குப் பிறகு இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்டில் ஒரே நாளில் அதிக விக்கெட்

    ஒரே நாளில் 24 விக்கெட்டுக்கள் வீழ்ந்ததன் மூலம் 116 வருடத்திற்குப் பிறகு இந்தியா- ஆப்கானிஸ்தான் டெஸ்டில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. #INDvAFG
    இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் பெங்களூருவில் நேற்று தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது. நேற்றைய முதல்நாளில் இந்தியா 6 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

    இன்று நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 109 ரன்னில் ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. அதன்பின் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 103 ரன்னில் சுருண்டது. இதனால் ஒரேநாளில் 24 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டது.



    கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் மூன்று முறைதான் 24 விக்கெட்டிற்கு மேல் வீழ்த்தப்பட்டது. 1888-ம் ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்டின் 2-வது நாளில் 27 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டது. இதுதான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரேநாளில் வீழ்த்தப்பட்ட அதிகபட்ச விக்கெட்டாகும்.



    அதன்பின் 1902-ல் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்டின் முதல் நாளில் 25 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்ப்டது. அதன்பின் 116 வருடம் கழித்து தற்போது 24 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. 1896-ம் ஆண்டு இங்கிலாந்து - ஆஸ்திரேலியா போட்டியில் 2-வது நாள் 24 விக்கெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
    Next Story
    ×