search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷ்ரேயாஸ் அய்யருக்கு கேப்டன் பதவி கிடைக்காவிடில் ஆச்சரியமாக இருக்கும்- பாண்டிங்
    X

    ஷ்ரேயாஸ் அய்யருக்கு கேப்டன் பதவி கிடைக்காவிடில் ஆச்சரியமாக இருக்கும்- பாண்டிங்

    வருங்காலத்தில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு கேப்டன் பதவி கிடைக்காவிடில், அது ஆச்சரியமான விஷயமாக இருக்கும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். #IPL2018 #DD
    ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களை கொண்ட டெல்லி டேர்டெவில்ஸ் 14 போட்டிகளில் ஐந்தில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது. சீசன் தொடக்கத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் தலைமையில் தொடர் தோல்வியை சந்தித்தது. இதனால் காம்பீர் நீக்கப்பட்டு ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அத்துடன் காம்பீர் நீக்கப்பட்டு பிரித்வி ஷா தொடக்க வீரராக களம் இறங்கினார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் டெல்லி டேர்டெவில்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முடிவில் டெல்லி ஐந்து வெற்றிகளை பெற்றுள்ளது. உச்சக்கட்டமாக மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பிளேஆஃப்ஸ் சுற்றை விட்டு வெளியேற்ற வைத்தது.

    ஷ்ரேயாஸ் அய்யரின் செயல்பாட்டால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மகிழ்ச்சியடைந்துள்ளார். வருங்காலத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டன் பதவியை வகிக்காவிடில் அது ஆச்சரியமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘கவுதம் காம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகியது எந்த எதிர்வினையும் அணியில் ஏற்படுத்தவில்லை. அவரது முடிவு வீரர்களுக்கும், எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இது மிகவும் தைரியமான முடிவு. இதேபோல் முடிவை ஒவ்வொரு நாளும் பார்க்க முடியாது.

    காம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகியது பிரித்வி ஷா தொடக்க வீரராக களம் இறங்கவும், ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக பதவி ஏற்கவும் வாய்ப்பளித்தது. தொடரில் இடையில் கேப்டன் பதவியை வாங்கி செயல்படுவது கடினமானது. ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டன் பதவி சவாலை திறமையாக எதிர்கொண்டார். அவர் அபாயகரமான இளம் வீரர். எதிர்காலத்தில் அவர் அதிகமான கேப்டன் பதவிகளில் பொறுப்பேற்றால், எனக்கு அது ஆச்சரியம் இருக்காது’’ என்றார்.
    Next Story
    ×