search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான உலக லெவன் அணியில் இருந்து அப்ரிடி விலகல்
    X

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான உலக லெவன் அணியில் இருந்து அப்ரிடி விலகல்

    லார்ட்ஸ் மைதானத்தில் மே 31-ந்தேதி நடைபெற இருக்கும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விளையாடும் உலக லெவன் அணியில் இருந்து அப்ரிடி விலகியுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸை கடந்த வருடம் இரண்டு புயல்கள் சூறையாடின. இதில் கிரிக்கெட் மைதானங்கள் சேதமடைந்தன. இதை சரி செய்வதற்காக நிதி திரட்ட லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற 31-ந்தேதி காட்சி டி20 போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் வெஸ்ட் இண்டீஸ் - உலக லெவன் அணிகள் மோதுகின்றன.

    உலக லெவன் அணியில் பாகிஸ்தானின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஷாகித் அப்ரிடி இடம்பிடித்திருந்தார். 38 வயதான அப்ரிடி, முழங்காலில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையவில்லை. அதனால் உலக லெவன் அணியில் பங்கேற்க இயலாது என டுவிட் செய்துள்ளார். இதனால் அப்ரிடி காட்சி போட்டியில் விளையாடவில்லை.



    அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நான் எனது டாக்டரை பார்ப்பதற்காக துபாய் சென்றுள்ளேன். இன்னும் எனது முழங்கால் காயம் முழுவதுமாக சரியாகவில்லை. எனக்கு இன்னும் 3 முதல் 4 வாரங்கள் தேவை. முழுமையாக குணமடைந்து திரும்புவேன் என்று நம்புகிறேன்’’ என்றார்.

    Next Story
    ×