search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதுதான் எங்களது தார்மீக மந்திரம் என்கிறார் விராட் கோலி
    X

    இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதுதான் எங்களது தார்மீக மந்திரம் என்கிறார் விராட் கோலி

    வாழ்வா? சாவா? என்ற நிலையில் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதுதான் எங்களுடைய தார்மீக மந்திரம் என விராட் கோலி தெரிவித்துள்ளார். #IPL2018 #ViratKohli #RCB
    ஐபிஎல் 11-வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் இதுவரை 8 அணிகளும் 12 போட்டிகளில் விளையாடிவிட்டன. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ள அணிகளில் ஒன்று எனக் கருதப்பட்டது. ஆனால் முதல் 10 போட்டிகளில் 7-ல் தோல்வியடைந்து மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருந்தது.

    இதனால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா? என்ற கேள்வி எழுந்தது. கடைசி நான்கு போட்டியில் வெற்றி பெற்றால் ஒருவேளை வாய்ப்புள்ளது. இதனால் கடைசி நான்கு போட்டிகளும் அந்த அணிக்கு வாழ்வா? சாவா? என்பதுதான். இதில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று பாதி கிணற்றை தாண்டியுள்ளது.



    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்குப்பின், இந்த தொடரில் நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதே எங்களுடைய தார்மீக மந்திரம் என விராட் கோலி கூறியுள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நாங்கள் இழப்பிற்கு ஒன்றுமில்லை. இது எங்களுக்கு நன்றாக வேலை செய்து கொண்டிருக்கிறது. மற்ற அணிகள் ஒரு அணிக்கெதிராக எச்சரிக்கையுடன் செல்லும். நாங்கள் அப்படிபட்ட நிலையில் சென்று கொண்டிருக்கவில்லை. நாங்கள் அடுத்த போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தினால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டம் மிகவும் சுவாரஷ்யமாக இருக்கும். அடுத்த போட்டிக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. இந்த இடைவெளியை சந்தோசமாக கழிக்க விரும்புகிறோம்’’ என்றார்.
    Next Story
    ×