
பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. கிறிஸ் கெய்ல், மயாங்க் அகர்வால் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், தொடக்க வீரர் கேஎல் ராகுல் 54 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 84 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தார். இவருக்குத் துணையாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 16 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 23 ரன்கள் அடித்து உதவினார்.

கேஎல் ராகுலுக்கு எதிராக நின்று ஆட்டத்தை ரசித்த ஸ்டாய்னிஸ், கேஎல் ராகுலின் இந்த 84 ரன்கள்தான் ஐபிஎல் சீசனின் சிறந்த ஆட்டம் என்று பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் கூறுகையில் ‘‘நாங்கள் விளையாடிய ஆடுகளம் சற்று கடினமாக இருந்தது. கேஎல் ராகுல் மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது அவருடைய சிறந்த இன்னிங்ஸ். சூழ்நிலையை அவர் புரிந்து கொண்டு, அதற்கேற்றபடி விளையாடினார். உண்மையில் அவரிடம் இருந்து ஸ்மார்ட் ஆன இன்னிங்ஸ் வெளிப்பட்டது’’ என்றார்.