என் மலர்

  செய்திகள்

  ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அட்டவணை வெளியீடு- ஏ பிரிவில் இந்தியா
  X

  ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அட்டவணை வெளியீடு- ஏ பிரிவில் இந்தியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இதற்கான தகுதிச் சுற்றின் முடிவில் 24 அணிகள் போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்தியாவுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தாய்லாந்து, பஹ்ரைன் அணிகளும் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ளன.

  ஆசிய கோப்பை தொடர் ஜனவரி 5-ந்தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரவு எமிரேட்ஸ் பஹ்ரைனை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 1-ந்தேதி இறுதிப் போட்டி நடக்கிறது. இந்தியா 6-ந்தேதி தாய்லாந்தையும், 10-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியையும், 14-ந்தேதி பஹ்ரைனையும் எதிர்கொள்கிறது.  ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, சிரியா, பாலஸ்தீனம், ஜோர்டான் அணிகள் இடம்பிடித்துள்ளன. ‘சி’ பிரிவில் தென் கொரியா, சீனா, கிர்கிஸ்தான், பிலிப்பைன்ஸ் அணிகளும், ‘டி’ பிரிவில் ஈரான், ஈராக், வியட்நாம், ஏமன் அணிகளும், ‘ஈ’ பிரிவில் சவுதி அரேபியா, கத்தார், லெபனான், வடகொரியா அணிகளும், ‘எஃப்’ பிரிவில் ஜப்பான், உஸ்பெகிஸ்தான், ஓமன், துர்க்மெனிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.

  லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும். அதனுடன் 3-வது மற்றும் 4-வது இடத்தைபிடிக்கும் முதல் நான்கு அணிகளும் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
  Next Story
  ×