என் மலர்

  செய்திகள்

  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் - இந்திய அணி 8-ந் தேதி அறிவிப்பு
  X

  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் - இந்திய அணி 8-ந் தேதி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி வருகிற 8-ந் தேதி தேர்வு செய்து அறிவிக்கப்படுகிறது. #BCCI #TeamIndia
  புதுடெல்லி:

  இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் ஜூன் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு இது முதல் டெஸ்ட் போட்டியாகும். இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி வருகிற 8-ந் தேதி தேர்வு செய்து அறிவிக்கப்படுகிறது.

  மேலும் ஜூன் 27-ந் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணியுடன் 2 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது. மற்றும் இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி ஜூன் 21-ந் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இந்த 3 போட்டி தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணிகள் ஒரேநேரத்தில் தேர்வு செய்யப்படுகிறது.

  இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடருக்கு தயாராகும் வகையில் கேப்டன் விராட் கோலி கவுண்டி கிளப் அணியான சுர்ரேவில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் கவுண்டி போட்டியில் விளையாட உள்ளார். இதனால் இவர்கள் இருவரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. #BCCI #TeamIndia 
  Next Story
  ×