என் மலர்

  செய்திகள்

  வில்வித்தையில் சென்னை மாணவர்கள் சாதனை- 15 நிமிடம் 15 நொடியில் 3232 அம்புகளை எய்தனர்
  X

  வில்வித்தையில் சென்னை மாணவர்கள் சாதனை- 15 நிமிடம் 15 நொடியில் 3232 அம்புகளை எய்தனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை முகப்பேர் வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியில் படித்துவரும் வரும் மாணவர்கள் 15 நிமிடம் 15 நொடியில் 3232 வில் அம்புகளை எய்தி சாதனைப் படைத்துள்ளனர்.
  சென்னையில் உள்ள ஜேஜே உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த 29-ந்தேதி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு வில்வித்தை சாதனைக்கான போட்டி நடைபெற்றது.

  இதில் முகப்பேர் வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆர்கே சாய்ஸ்ரீ கார்த்திக் (4-ம் வகுப்பு), ஸ்ரீ சந்தானபாலன் (யூகேஜி) ஆகியோர் கலந்து கொண்டு 15 நிமிடம் 15 நொடியில் தொடர்ந்து 3232 வில் அம்புகளை எய்து புதிய உலக சாதனைப் படைத்தார்கள்.  சாதனைப் புரிந்த மாணவர்களை மெட்ரிக் பள்ளி இணை இயக்குநர் டாக்டர் சி.உஷாராணி பாராட்டினார்.
  Next Story
  ×