என் மலர்

  செய்திகள்

  அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார் டோனி
  X

  அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார் டோனி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். #MSDhoni #MostSixes #IPL2018 #VIVOIPL

  கொல்கத்தா:

  ஐபிஎல் டி-20 கிரிக்கெட் 11வது சீசன் நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வருகிறது.

  இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ரன் குவிப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அணியின் பேட்ஸ்மேன்கள் பெரும்பாலானோர் இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் ரன்கள் குவித்து வருகின்றனர். 

  புள்ளிப்பட்டியலில் இரண்டாவது உள்ள சி.எஸ்.கே., இந்த சீசனில் அதிக சிக்சர்கள் அடித்துள்ள அணிகளிலும் முதலிடத்தில் உள்ளது. சிஎஸ்கே இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களில் 93 சிக்சர்களை பறக்க விட்டுள்ளது.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 78, டெல்லி டேர்டெவில்ஸ் 75, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 74 சிக்சர்களை அடித்துள்ளன. பஞ்சாப் 50, மும்பை 48, ராஜஸ்தான் 44, ஐதராபாத் 28 சிக்சர்களை அடித்துள்ளன.  இந்த சீசனில் சி.எஸ்.கே. கேப்டன் மகேந்திர சிங் டோனி ருத்ரதாண்டவம் ஆடி வருகிறார். அவர் இதுவரை நடந்துள்ள 9 ஆட்டங்களில் 24 சிக்சர்களை அடித்துள்ளார். டோனி அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 329 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார். அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் முதல் இடத்தில் உள்ளார். பஞ்சாபின் கிறிஸ் கெயில், பெங்களூரின் டிவில்லியர்ஸ், கொல்கத்தாவின் ஆந்தரே ரசல் ஆகியோர் 23 சிக்சர்களை அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர். அவர்களை தொடர்ந்து சி.எஸ்.கே. வீரர் ராயுடு மற்றும் டெல்லியின் ரிஷப் பந்த் ஆகியோரும் 20 சிக்சர்களை அடித்துள்ளனர்.
   
  அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சென்னை அணியின் அம்பதி ராயுடு 391 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். #MSDhoni #MostSixes #IPL2018 #VIVOIPL
  Next Story
  ×