search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018- மும்பை இந்தியன்ஸ்க்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி
    X

    ஐபிஎல் 2018- மும்பை இந்தியன்ஸ்க்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி

    பெங்கரூருவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். #IPL2018 #RCBvMI
    ஐபிஎல் தொடரின் 31-வது ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் செய்தது. குயின்டான் டி காக் - மனன் வோரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    முதல் மூன்று ஓவரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 4-வது ஓவரை டுமினி வீசினார். இந்த ஓவரில் வோரா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் மட்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு 22 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரை மெக்கிளேனகன் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் டி காக் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்தில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    2-வது விக்கெட்டுக்கு வோரா உடன் மெக்கல்லம் ஜோடி சேர்ந்தார். வோரா 31 பந்தில் 45 ரன்கள் எடுத்த நிலையில் மார்கண்டே பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 3-வது விக்கெட்டுக்கு மெக்கல்லம் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 9 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது.



    மெக்கல்லம் - விராட் கோலி ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன் மளமளவென உயர்ந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14.3 ஓவரில் 121 ரன்கள் எடுத்திருக்கும்போது மெக்கல்லம் 25 பந்தில் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்அவுட் ஆனார். மெக்கல்லம் - விராட் கோலி ஜோடி 5.5 ஓவரில் 60 ரன்கள் குவித்தது. மெக்கல்லம் ஆட்டத்திற்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஸ்கோர் சரிய ஆரம்பித்தது.

    18-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் மந்தீப் சிங் (14), விராட் கோலி (32), வாஷிங்டன் சுந்தர் (1) ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணியின் ஸ்கோர் 150 ரன்னை எட்டுவதற்கே திணறியது. 19-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் 1 விக்கெட்டுடன் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.



    கடைசி ஓவரை மெக்கிளேனகன் வீசினார். இந்த ஓவரில் கொலின் டி கிராண்ட்ஹோம் மூன்று சிக்சர்கள் விளாச ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 24 ரன்கள் எடுக்க 20 ஓவரில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
    Next Story
    ×