search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018 - 360 டிகிரி இல்லாமல் முதலில் களம் இறங்குகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    X

    ஐபிஎல் 2018 - 360 டிகிரி இல்லாமல் முதலில் களம் இறங்குகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. ஏபி டி வில்லியர்ஸ் காய்ச்சலால் இன்று விளையாடவில்லை. #IPL2018 #RCBvKKR
    ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 28-வது லீக்கான முதல் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சொந்தமான ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 11 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.

    29-வது லீக்கான 2-வது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    காய்ச்சல் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஏபி டி வில்லியர்ஸ் இடம்பெறவில்லை. அதேபோல் பவன் நெகி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக டிம் சவுத்தி, மனன் வோரா, முருகன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. குயின்டான் டி காக், 2. விராட் கோலி, 3. மனன் வோரா, 4. மெக்கல்லம், 5. மந்தீப் சிங், 6. கொலின் டி கிராண்ட்ஹோம், 7. முருகன் அஸ்வின், 8. டிம் சவுத்தி, 9 உமேஷ் யாதவ், 10. மொகமது சிராஜ், 11. சாஹல்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கிறிஸ் லின், 2. சுனில் நரைன், 3. ராபின் உத்தப்பா, 4. நிதிஷ் ராணா, 5. தினேஷ் கார்த்திக், 6. ஷுப்மான் கில், 7. ரஸல், 8. ஷிவம் மவி, 9. சாவ்லா, 10. மிட்செல் ஜான்சன், 11. குல்தீப் யாதவ்
    Next Story
    ×