search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி டேர்டெவில்ஸ் யுக்தியை ஆர்சிபி பின்பற்ற முயற்சி செய்யும் - கவாஸ்கர்
    X

    டெல்லி டேர்டெவில்ஸ் யுக்தியை ஆர்சிபி பின்பற்ற முயற்சி செய்யும் - கவாஸ்கர்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக டெல்லி டேர்டெவில்ஸ் கையாண்ட யுக்தியை ஆர்சிபி பின்பற்ற முயற்சி செய்யும் என கவாஸ்கர் கூறியுள்ளார். #RCBvKKR
    ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது.

    பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. கொல்கத்தா அணியில் கிறிஸ் லின், சுனிலை நரைன், ராபின் உத்தப்பா ஆகிய தொடக்க அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்ததால் இலக்கை எட்டிப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.



    ஆனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஷார்ட் பால் பவுன்ஸ் யுக்தியை கடைபிடித்தது. தொடக்க வீரராக களம் இறங்கும் சுனில் நரைன் ஸ்டம்பிற்குள் பந்தை வீசினால் சிக்சருக்கு விரட்டி விடுவார். இதனால் ஷார்ட் பால் பவுன்ஸ் யுக்தியை பயன்படுத்தியது. 9 பந்திற்கு 26 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அதேபோல்தான் உத்தப்பாவையும் போல்ட் தூக்கினார்.



    இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சொந்த மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தாவிற்கு எதிரான முதல் ஆட்டத்தில் சுனில் நரைன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்து வீச்சை துவம்சம் செய்துவிட்டார். இதனால் இன்றைய ஆட்டத்தில் ஷார்ட் பால் பவுன்ஸ் யுக்தியை கடைபிடிக்க ஆர்சிபி முயற்சி செய்யும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.
    Next Story
    ×