search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானுடன் மோதல் - ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் ஐதராபாத்
    X

    ராஜஸ்தானுடன் மோதல் - ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் ஐதராபாத்

    ஐ.பி.எல். தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் மோதும் ஐதராபாத் அணி, ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. #IPL2018 #RRvSRH
    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. ஜெய்ப்பூரில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் - வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி ஐதராபாத்தை வீழ்த்தி 4-வது வெற்றி பெற்று முன்னேற்றப் பாதைக்கு செல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

    ஐதராபாத்திடம் ஏற்கனவே 9 விக்கெட்டில் தோற்று இருந்தது. இதற்கு ராஜஸ்தான் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐதராபாத் அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி கடைசி 2 ஆட்டத்தில் குறைவான ரன் எடுத்து பந்து வீச்சாளர்களால் வெற்றி பெற்றது.

    மேலும் ராஜஸ்தானை ஏற்கனவே தோற்கடித்து இருந்ததால் மீண்டும் வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் நம்பிக்கையில் உள்ளது. தொடர்ச்சியாக 2 ஆட்டத்தில் வென்ற அந்த அணி ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

    இரவு 8 மணிக்கு பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் - தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.



    பெங்களூர் அணி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பஞ்சாப், டெல்லியை வீழ்த்தி இருந்தது. கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை, சென்னை அணிகளிடம் தோற்று இருந்தது.

    கொல்கத்தா அணியிடம் ஏற்கனவே அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் பெங்களூர் அணி இருக்கிறது.

    கொல்கத்தா அணி 3 வெற்றி, 4 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 2 போட்டியில் தோற்ற அந்த அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க போராடும். ஏற்கனவே அந்த அணியை வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் விளையாடும். #IPL2018 #RRvSRH
    Next Story
    ×